இந்தியா

கட்சிக்கு நிதியளித்தவர்களின் பெயர், விவரங்களை அளிக்க தேசியக் கட்சிகள் மறுப்பு

செய்திப்பிரிவு

கட்சிகளுக்கு ரூ.20,000-த்திற்கும் மேல் நன்கொடை அளித்தவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்களை அளிக்க தேசியக் கட்சிகள் மறுப்பதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

2012-13 ஆம் நிதியாண்டில் ரூ.11.14 கோடி தொகை நன்கொடை அளித்தவர்களின் 703 நன்கொடையாளர்களின் பெயர், முகவரி, நிரந்தர கணக்கு எண் ஆகிய விவரங்களை தேசியக் கட்சிகள் அளிக்க மறுத்துள்ளன.

பாஜக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு நன்கொடையாக வந்துள்ள ரூ.10.84 கோடி தொகைக்கு பங்களிப்பு செய்த 655 பேர்களின் விவரங்களை அளிக்க இக்கட்சிகள் மறுத்துள்ளன.

தேர்தல் ஆணையம் இது குறித்து உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அதன் படி ரூ.20,000த்திற்கும் மேல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் முழு விவரங்கள், பணம் கொடுக்கப்பட்ட முறை ஆகியவற்றை கட்சிகள் வெளியிடுவது அவசியம்.

ஆனால் இதற்கு ஒரு போதும் செவி சாய்க்காத தேசியக் கட்சிகளுக்கு நன்கொடையாக வந்துள்ள ரூ.99.14 கோடிக்கு பங்களிப்பு செய்த 3,777 நன்கொடையாளர்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

இந்தப் பட்டியலில் ஆளும் பாஜக முதலிடம் வகிக்கிறது. இந்தக் கட்சிக்கு சுமார் 1,670 பேர் ரூ.25.99 கோடி நன்கொடை அளித்துள்ளனர். ஆனால் இவர்கள் விவரங்களைக் காணோம்.

நன்கொடையாளர்கள் அதிகம் பாஜக-விற்கு இருந்தாலும் அதிக தொகையை நன்கொடையாக பெற்றிருப்பதில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது, தொகை: ரூ.425.69 கோடி!!

தேசியக் கட்சிகளுக்கு வந்துள்ள நன்கொடைத் தொகை ரூ.991.20 கோடியாகும். காங்கிரஸிற்கு அடுத்தபடியாக பாஜக ரூ.324.16 கோடி நன்கொடை பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் நன்கொடை வரவு ரூ.87.63 கோடி. ஆனால் ரூ.20,000த்திற்கும் மேல் தங்கள் கட்சிக்கு யாரும் நன்கொடை அளிக்கவில்லை என்பதை இந்தக் கட்சி 2004-05 ஆம் ஆண்டு முதல் கூறிவருகிறது.

தேசியக் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு 72%. தனிநபர் பங்களிப்பு 17%.

SCROLL FOR NEXT