இந்தியா

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தாமதமானால் அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம்: கேஜ்ரிவால் அரசு எச்சரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி அரசில் ஒப்பந்ததாரர் மூலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமாக அளிக்கப்படுவதாக புகார் நிலவுகிறது. இது தொடர்பாக உயரதிகாரிகளின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என கேஜ்ரிவால் அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் கே.கே.சர்மா நேற்று அனைத்து துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அனைத்து துறைகளிலும் ஒப்பந்ததாரர் மூலம் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் பட்டுவாடா செய்யப்படுவதை துறை செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு ஒப்பந்த தொகைக்கான ஒப்புதலை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். இதை துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் செய்யத் தவறினால் அவர்களின் அடுத்த மாத அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வரை பிடித்தம் செய்யப் படும்” என்று எச்சரித்துள்ளார்.

டெல்லி அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பந்ததாரர் மூலம் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்க ளுக்கு குறித்த தேதியில் ஊதியம் தரப்படுவதில்லை என கடந்த பல ஆண்டுகளாக புகார் கூறி வருகின் றனர். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அர்விந்த் கேஜ்ரிவால் உறுதி அளித்திருந்தார். இதை செயல்படுத்தும் விதமாக கடந்த வாரம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

“ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ் வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் ஊதியம் அளிக்கப்பட வேண்டும். இதன் மீதான அறிக்கையை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஒவ் வொரு மாதமும் 22-ம் தேதி தலைமைச் செயலாளர் அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்த பிரச்சினை ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் அதற்கான ரசீதை உரிய நேரத்தில் அளிக்காமல் இருப்பதால் ஏற்படுகிறது. இந்நிலையில் ரசீதை தாமதமாக அளிக் கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்தும் கேஜ்ரிவால் அரசு ஆலோசித்து வருகிறது.

SCROLL FOR NEXT