இந்தியா

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 361 பேரை மீட்க நடவடிக்கை

இரா.வினோத்

பெங்களூரு: உக்ரைனில் சிக்கியுள்ள கர்நாடக மாநிலத்தவர்களை மீட்பது குறித்து நேற்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்வர் பசவராஜ் கூறுகையில், ‘‘கர்நாடகாவை சேர்ந்த 361 பேரையும் பத்திரமாக மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்துள்ளேன். தற்போது இந்தியதூதரக அதிகாரிகள் பேருந்துகளில் 100 மாணவர்களை மீட்டுள்ளனர். அவர்களில் 10 பேர்கர்நாடகாவை சேர்ந்தவர்கள். உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். விமான சேவை தொடங்கப்பட்டதும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்’’ என்றார்

SCROLL FOR NEXT