சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி மக்களைப் பாதுகாக்க முடியாத சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருக்க தகுதி இல்லை என்று உ.பி. ஆளுநர் ஜோஷிக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது.
"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் அடிமட்டத்திற்குச் சென்று விட்டது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரு மாவட்டம் கூட அங்கு இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. நல்லாட்சியையும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத ஒரு அரசு ஆட்சியில் இருக்க உரிமையற்றது" - என்று பாஜக-வின் மாநிலத் தலைவர் லஷ்மி காந்த் பாஜ்பாய் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், குற்றங்கள் நடக்கும், அதனைக் கட்டுப்படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே அரசின் கடமையாகும் ஆனால் அகிலேஷ் அரசு இதற்கு எதிர்மாறாகச் செயல்பட்டு வருகிறது.
உ.பி. போலீஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கி ஒடுக்கி குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது என்று அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.