பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டு வரு வதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பி அதை விளக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத் தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரமாக கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று வர்ணிக் கின்றனர். இந்தியாவுக்கு சொந்த மான இந்த வைரம் பல நூற் றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது.
அப்போது முதல் இந்த வைரம் பிரிட்டன் மன்னர் பரம்பரையின் சொத்தாக மாறியுள்ளது. தற்போது மகாராணியின் மகுடத்தில் இந்த வைரம் பதிக்கப்பட்டு, ஆண்டு தோறும் லண்டனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
பிரிட்டன் இளவரசர் வில்லியமை மணந்துள்ள இளவரசி கேத்மிடில்டன், அடுத்த மகாராணி யாக பட்டம் ஏற்கும்பட்சத்தில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த மகுடம் அவருக்கு சென்று சேரும்.
இளவரசி மிடில்டன், இளவரசர் வில்லியமுடன் இணைந்து நாளை முதல் இந்தியா, பூட்டான் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தச் சூழலில், அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி முன்னணி என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கு தொடர்பாக கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டு வருவதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளது.
மனுவை ஆராய்ந்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ‘‘பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தை பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையை பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே அந்த வைரத்தை மத்திய அரசு கொண்டு வர எண்ணம் வைத்துள் ளதா? என கேள்வி எழுப்பினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கோஹினூர் வைரம் குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன், ‘‘மகாராணியின் மகுடத்தில் அந்த வைரம் பதிக்கப்பட்டு விட்டது. அதை திரும்ப இந்தியாவுக்கு அளிப்பார்கள் என நான் நம்பவில்லை’’ என்றார்.