கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதனால் ஆளும் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களும் மார்க் சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைவர் களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தன் அண்மையில் கூறியபோது, முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் 31 வழக்குகளும் அவரது அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள 18 அமைச்சர்களுக்கு எதிராக 136 ஊழல் வழக்குகளும் உள்ளன என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு 2 நாட்களில் மன்னிப்பு கோராவிட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பேன் என்று உம்மன் சாண்டி கெடு விதித்திருந் தார். ஆனால் அச்சுதானந்தன் மன்னிப்பு கோரவில்லை.
இதை தொடர்ந்து திருவனந்த புரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அச்சுதானந்தனுக்கு எதிராக சாண்டி நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் அச்சுதா னந்தன் நஷ்டஈடுதர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திடமும் சாண்டி புகார் மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதால் அச்சுதானந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.