இந்தியா

ஜூன் 5-க்குள் கேரளத்தில் பருவமழை

செய்திப்பிரிவு

கேரளத்தில் வரும் 5ம் தேதிக்குள் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மழை இந்த தேதிக்கு சில தினங் கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித் துள்ள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் ஆரம்பித்த பிறகே நாட்டின் பிற பகுதிகளுக்கும் மழைக்காலம் தொடங்குகிறது.

இந்த பருவமழை பற்றிய முன்னறிவிப்புகள் கடந்த 9 ஆண்டுகளாக மிகத் துல்லிய மாகவே உள்ளன என இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக் கிறது.

14 வானிலை மையங்களில்

இந்த முறை, லட்சத்தீவு, கேரளம், மங்களூரில் அமைந் துள்ள 14 வானிலை மையங்களில் பதிவாகி உள்ள விவரப்படி கேரளத்தில் வரும் 5-ம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மே 10-ம் தேதியிலிருந்து மழை அளவு கண்காணிக்கப்படுகிறது. 60 சதவீத வானிலை மையங்களில் தொடர்ந்து இரு தினங்களுக்கு 2.5 மிமீ மழை அளவு பதிவானால் பருவமழை காலம் தொடங்கிவிட்டதற்கான அடையாளமாக கருதலாம். காற்றின் வேகத்தை வைத்தும் பருவமழை தொடங்குவது கணிக்கப்படுகிறது.

கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ல் பருவமழை தொடங்கும். அதன் பிறகு வடக்கு முகமாக முன்னேறி ஜூலை 15-க்குள் நாடு முழுவதுக்கும் விரிவடையும்.

SCROLL FOR NEXT