இந்தியா

மோடி அலையால் மேற்கு வங்கத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் எழுச்சி

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகி வருவதாக அக்கட்சி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மோடி அலையால் மேற்கு வங்கத்தில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எழுச்சி கண்டு வருவதாக அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் சித்திநாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு பாஜகவுக்கு 3 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர், ஆனால் 2013 முடிவுல் எடுக்கப்பட்ட கணக்கின் படி பாஜக உறுப்பினர்கள் எண்ணிகை 7 லட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.

மோடி பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் மட்டும் 2 லட்சம் பேர் பாஜகவில் இணைந்துள்ளதாகவும், இது மோடி அலையால் ஏற்பட்டதே என்றும் அவர் தெரிவித்தார்.

இதே போல் பாஜக இளைஞர் அணிக்கு கடந்த 6 மாதங்களில் 45,000 புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், மகளிர் அணிக்கும் 50% வரை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடி அலை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்கம் பிப்ரவரி 5.ல் நடைபெறவிருக்கும் பேரணியில் நிரூபிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT