இந்தியா

மைசூரு உணவகத்தில் புடவை அணிந்து உணவு பரிமாறும் ரோபோவுக்கு வரவேற்பு

இரா.வினோத்

மைசூருவில் உள்ள உணவகத்தில் புடவை அணிந்தரோபோ வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை பரிமாறுவது வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள சித்தார்த்தா உணவகத்தில் கடந்த 14-ம்தேதி காதலர் தினத்தையொட்டி புடவை அணிந்தரோபோ வாடிக்கையாளர் களுக்கு உணவு பரிமாறும்பணியில் ஈடுபட்டது.

இதனை கண்ட வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்ததுடன், ரோபோவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து உணவகத்தின் மேலாளர் ரமேஷ் கூறுகையில், ‘‘இந்த ரோபோவுக்குஎக்கோ என பெயரிட்டுள் ளோம். டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.5 லட்சத்துக்கு வாங்கினோம். செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் திட்டமிடப் பட்ட இந்த ரோபோ, தரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தப் பட்டையின் உதவியுடன் நகர்கிறது.

வாடிக்கையாளர்களிடம் உணவக பணியாளர்கள் எடுக்கும் ஆர்டரை அவர் சமையல் அறையில் இருப்பவர்களுக்கு வழங்குவார்.ஆர்டர் செய்யப்பட்ட உணவை ரோபோ எடுத்துச்சென்று வாடிக்கையாளர் களுக்கு வழங்கும். ஒரு குறிப்பிட்ட மேஜையில் கொடுக்கப்பட்ட பல்வேறு ஆர்டர்கள் தயாரான உடன், ரோபோ அவ்வப்போது எடுத்துச்சென்று வாடிக்கையாளர் களுக்கு பரிமாறும்.

மைசூருவில் முதல்முறையாக அறிமுகப்பட்டுள்ள இந்த ரோபோ பணியாளருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பாரம்பரிய‌ புடவை, வளையல், கழுத்தணி ஆகியவற்றை அணிந்துள்ள இந்தரோபோவுக்கு, நவீன உடைகளையும் அணிவிக்க இருக்கிறோம். இதற்காக மைசூருவில் உள்ள பிரபல துணிக்கடையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறோம்''என்றார்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகியுள்ள இந்த ரோபோ உணவை வழங்கினாலும், அதனால் மனிதர்களைப் போல‌ சிரித்த முகத்துடன் அன்போடு பரிமாற முடியவில்லை என வாடிக்கையாளர்கள் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT