காஷ்மீரில் 3-வது நாளாக நேற்றும் பதற்றம் நீடித்தது. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக காஷ்மீரின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இணையதளம் மற்றும் மொபைல் சேவைகளை அரசு முடக்கி வைத்துள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் ராணுவ வீரர்களால் மானபங்கப்படுத்தப்பட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் குதித்த வர்கள் வன்முறையில் இறங்கினர். பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர, வன்முறையால் காயமடைந்த ஒரு பெண் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், போராட்டம் மீண்டும் வெடித்துவிடாமல் இருக்க குப்வாரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஸ்ரீநகர், ஹந்த்வாரா, லங்கேட் பகுதிகளி லும் காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடு விதிக்கப்படாத சில பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. கல்வி நிலையங்களும் மூடப்பட் டிருந்தன.
வடக்கு காஷ்மீர், ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ஆகிய பகுதிகளில் செல்போன் சேவைகள், இணையதள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சேவைகள் முடக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இக்கட்டுப்பாடு தற்காலிகமா னது என்றும், இயல்பு நிலை திரும்பி யதும் சேவைகள் வழக்கம்போல் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிவினைவாத தலைவர்களின் அழைப்பை ஏற்று வர்த்தக நிறு வனங்கள், கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.