சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் அரசு தலையிடாது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று தெரிவித்தார்.
கேரளாவில் அடுத்த மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச் சாரம் சூடுபிடித்துள்ளது.இந்நிலை யில் கொச்சியில் நேற்று பிரச்சாரத் தில் ஈடுபட்ட உம்மன் சாண்டியிடம், சபரிமலை விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பொதுமக்களின் மத நம்பிக்கை மற்றும் பாரம்பரிய வழக்கம் உள் ளிட்ட விவகாரங்களில், அரசு தனது எல்லையை மீறி தலையிடாது. இந்த விவகாரங்களை கையாள் வதற்கான உரிமை வேறு அமைப்பு களுக்கு உள்ளது. எனவே அவர் கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக் குள் செல்ல, 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் பெண் களுக்கும் அனுமதி வழங்க வலி யுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை யின்போது, பெண்களை அனு மதிக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோயில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மாதவிடாய் காரணமாக பாரம் பரியமாக பெண்களை அனுமதிப்ப தில்லை என்று வாதிட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.