இந்தியா

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பாலின பேதம் கூடாது: உச்ச நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

சபரிமலையில் பெண்களை அனு மதிக்கும் விவகாரத்தில் பாலின பேதம் கூடாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வரையிலான பெண்கள் அனு மதிக்கப்படுவதில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘‘இந்து மதத்தில் ஆண், பெண் என்ற பேதங்கள் ஏதும் இல்லை. இந்து என்றால் இந்து தான். எனவே கோயில் வழிபாட்டில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் சட்ட அமைப்பின் சம உரிமை கோட்பாட்டை மீறும் செயலாகும். அரசியல் சட்ட அமைப்பு என்ன உத்தரவாதம் அளித்துள்ளதோ அதன் அடிப்படையில் தான் இதை அணுக வேண்டுமே தவிர, பாரம்பரியம், வழிபாட்டு முறை என்ற அடிப்படையில் அணுகுவதை ஏற்க இயலாது’’ என தெரிவித்தனர்.

முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சபரிமலையில் உள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் அமர்ந் திருப்பவர். எனவே மாதவிடாய் பருவமெய்திய பெண்களை வழிபாட்டுக்கு அனுமதித்தால், கோயிலின் புனிதம் கெட்டு விடும்’’ என வாதாடினர்.

SCROLL FOR NEXT