இந்தியா

'சிப் வைத்து அனுப்பினார்கள்': அஜித் தோவல் வீட்டினுள் நுழைய முயன்ற மர்ம நபர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபரிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டு வளாகத்திற்குள் காரில் ஒரு மர்ம நபர் அத்துமீறி பிரவேசிக்க முயன்றார்.

அவரை தடுத்த நிறுத்திய பாதுகாவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபருக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர் வாடகைக் காரை ஓட்டிவந்துள்ளார்.

விசாரணையின் போது அந்த நபர் "எனுக்குள் யாரோ சிலர் மைக்ரோ சிப் வைத்துள்ளனர். அவர்கள் இயக்கியதால் தான் நான் அங்கு வந்தேனே நானாக அங்கு வரவில்லை" என்றார்.

இதனாலேயே அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT