சண்டிகர்: பஞ்சாபின் சண்டிகர் அருகே நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது:
பஞ்சாப் மாநிலத்திற்கு அமைதி மிக முக்கியம் ஆகும். பஞ்சாப் ஒரு ஆய்வகம் அல்ல. உணர்வுபூர்வமான எல்லை மாநிலம். காங்கிரஸ் கட்சியால் மட்டுமேஇங்கு அமைதியை நிலைநாட்டமுடியும். ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்று சிலர் (ஆம்ஆத்மி கட்சியினர்) கேட்கின்றனர். அவர்கள் பஞ்சாபை அழித்துவிடுவார்கள்.
பிரதமர் மோடி, அர்விந்த் கேஜ்ரிவால் என தலைவர்களின் முகத்தை மட்டுமே பார்க்காதீர்கள்கள். அவர்கள் பின்னால் மறைந்திருக்கும் சக்திகளை பாருங்கள். அவர்களின் செயல்பாடுகளை பாருங்கள். பிறகு அவர்களின் அரசியலை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். மோடிக்கு பின்னால் ஏழைகளின் சக்தி இல்லை. அவர் தனிப்பட்ட நபர் அல்ல. இவருக்கு பின்னால் மறைமுக சக்தி உள்ளது. விவசாயிகளின் சக்தியை இவர்கள் கொண்டிருந்தால் டெல்லி போராட்டத்தில் 700 விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள் என்றார்.