புனே: அல்போன்சா மாம்பழம், மாம்பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் அல்போன்சா உற்பத்தி முக்கியமாக கொங்கன் மற்றும் ரத்தினகிரி மாவட்டங்களில் மட்டுமே நடைபெறுகிறது.
இந்நிலையில் புனே நகரில் உள்ள வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடத்துக்கு நேற்று முன்தினம் அல்போன்சா மாம்பழங்கள் வந்தன. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இறுதியில் ஒரு பெட்டிமாம்பழங்களை ஒருவர் ரூ.31ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்தார். இதுகுறித்து அந்த வியாபாரி கூறும்போது, “சீசனுக்கான முதல் மாம்பழங்கள் சந்தைக்கு வரும்போது, வியாபாரிகள் அதை கைப்பற்ற முயற்சிப்பதால் அவை அதிக விலைக்கு ஏலம் போகும்” என்றார்.