இந்தியா

கேந்திரிய பள்ளிகளில் அனுமதிக்கும்போது அரசு பள்ளிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? - கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப் பட்டதற்கு எதிராக உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் 3 பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் வாதிடுகையில், ‘‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை அரசமைப்பின் 25ம் (மத உரிமை) பிரிவுக்கு எதிரானது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிய அனு மதிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதித்தது ஏன்?

சீருடை, ஆடை கட்டுப்பாடு குறித்து கல்லூரி மேம்பாட்டுக் குழு எப்படி முடிவெடுக்க முடியும்? ஹிஜாபை தடை செய்ய அந்த குழுவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT