இந்தியா

அசாம் மாநிலத்தின் ஹபாங்கில் செல்பி மோகத்தால் வாக்குப் பதிவு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

அசாம் மாநிலத்தில் நடந்த தேர்தலில், செல்பி மோகத்தால் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அசாம், மேற்குவங்கத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடந்தது.

இந்நிலையில், அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹபாங் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குப் பதிவு நடந் துள்ளது.

இந்தத் தேர்தலில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக குறும்படங்கள் மூலமும், வாட்ஸ் அப் மூலமும் பிரச்சாரங்களை செய்து வருகிறது. அதற்கு அசாமில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அசாமில் கடும் மழை பெய்தது. சாலைகளும் மோசமானது. எனினும், வாக்காளர்கள் குறிப்பாக முதல் முறை வாக்களிக்க இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு திரண்டு வந்தனர். அதற்கு மற்றொரு காரணம், ‘உங்கள் வாக்குகளை செலுத்துங்கள், அதன் செல்பியை ‘வாட்ஸ் அப்’பில் பகிருங்கள் என்ற போட்டி அறிவிக்கப் பட்டிருந்தது. அதனால் ஹபாங் கில் 81.67 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹபாங் பகுதி நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதி. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு அடிக்கடி நடந்து வரும் தாக்குதலில் பலர் பலியாகி உள்ளனர். எனினும், தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT