இந்தியா

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 71,365; நேற்றைவிட சற்றே அதிகம்: தினசரி பாசிடிவிட்டி விகிதம் 4.5%

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 71,365 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 4.5% என்றளவில் சரிந்தது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. அரசாங்கமும் நாட்டில் மூன்றாவது கரோனா அலை ஏற்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71,365 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது நேற்றைவிட 5.5% அதிகம்.

* அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 4.54% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 7.57%
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71,365 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,10,12,869.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,72,211 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,10,12,869.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,05,279.
* இதுவரை நாடு முழுவதும் 1,70,87,06,705 கோடி (170.87 கோடி ) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அன்றாட கரோனா தொற்று குறைந்து வருவதால், மும்பையில் இந்த மாதம் இறுதியில் பல்வேறு தளர்வுகளும் அமலுக்கு வரும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹரியாணா மாநிலத்தில் நாளை (பிப்.10) முதல் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT