இந்தியா

சாரதா சிட்பண்ட் ஊழலில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பிடிஐ

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய் துள்ளது.

மேற்குவங்கம், ஒடிசா மாநிலங் களில் செயல்பட்ட சாரதா சிட்பண்ட் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி யில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சாரதா சிட்பண்ட் தலைவர் சுதிப்தா சென், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சிருஞ் ஜெய் போஸ் உட்பட 21 பேர் மீது கொல்கத்தா அமர்வு நீதிமன்றத் தில் அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

SCROLL FOR NEXT