இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 41 சீன ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ஆஸ்திரேலிய பத்திரிகை தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம்ஆண்டு நடந்த மோதலில் சீனாஅதிக இழப்பை சந்தித்துள்ளதாகவும் அந்நாட்டின் 41 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம்ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நமது வீரர்கள் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆனால், தங்கள் தரப்பில் 5 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால், உயிரிழப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில், கல்வான் மோதலில் சீன ராணுவத்துக்கு அதிக இழப்பு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய புலனாய்வு செய்தி பத்திரிகையான ‘கிளாக்சன்’ தெரிவித்துள்ளது. இந்த பத்திரிகை சார்பில்உண்மை கண்டறிய அமைக்கப்பட்ட குழுவினர் இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கல்வான் மோதலில் சீனாவுக்கு இழப்பு அதிகம் என்றும் இந்திய வீரர்களின் தாக்குதலில் இருந்து தப்பி இருளில் ஆற்றில் குதித்து தப்ப முயன்றபோது 38 சீன வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மோதலில் காயமடைந்து இறந்த சீன வீரர்களையும் சேர்த்து 41 வீரர்கள் சீன தரப்பில் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT