இந்தியா

பட்ஜெட் தொடரில் ஆக்கப்பூர்வமாக செயல்பட எம்.பி.க்களுக்கு வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்து அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டாகவும் நாட்டின் முதல் தேர்தல் நடந்த 70-வது ஆண்டாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்தக் கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதற்கும் அப்பால் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் 52.10% வீணானது. கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அவை நடவடிக்கைகள் 93.50% செயல்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதை எம்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்து அவை நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்க எம்.பி.க்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாட்டில் உள்ள 5,000 எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் மற்றும் எம்எல்சிக்கள் இந்த முக்கியமான நேரத்தில் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT