லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாபியா கும்பல்களை ஒன்று சிறைகளில் காணலாம் அல்லது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் நாம் காண முடிகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி பேசினார்.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
தேர்தலையொட்டி அங்கு கட்டுப்பாடுகளுடன் பிரச்சாரம் நடைபெறுகிறது. பெருமளவில் காணொலி மூலமாகவும், வெர்ச்சுவல் பிரச்சாரமும் களைகட்டி வருகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் உ.பி.யில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அட்ராலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் மாபியா கும்பல்களை ஒன்று சிறைகளில் காணலாம் அல்லது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் நாம் காண முடிகிறது. உத்தரப் பிரதேசத்தில் மாபியாவை தேடினால், சிறை, உத்தரப் பிரதேசத்திற்கு வெளியே, சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் மூன்று இடங்களில் மட்டுமே தெரியும்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இருந்தபோது உத்தரப் பிரதேச மக்களை குண்டர்கள் துன்புறுத்தியதை யாரும் மறக்க முடியாது.
அப்போது போலீஸார் கூட மாபியா கும்பலுக்கு பயந்தனர். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஏராளமான மாபியா கும்பல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன. குண்டர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறினர்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.