இந்தியா

குர்காவ்ன் இனி குருகிராம்

செய்திப்பிரிவு

டெல்லி அருகேயுள்ள குர்காவ்ன் நகரம் குருகிராம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள குர்காவ்ன் நகரின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர். இதுகுறித்து மனோகர் லால் கத்தார் தலைமையிலான அரசு ஆலோசித்து பெயரை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “துரோணர் காலத்தில் இருந்து இந்த நகரம் குர்காவ்ன் என்று அழைக்கப்படுகிறது. இது இளவரசர்கள் கல்வி பயின்ற இடம். அதன்படி நகரின் பெயரை குருகிராம் என மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரினர். அதை ஏற்று குர்காவ்ன் நகரம் குருகிராம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT