இந்தியா

வீட்டில் இருந்தபடியே பணியாற்ற 82 சதவீத ஊழியர்கள் விருப்பம்: ஆய்வில் புதிய தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதித்தன. இந்நிலையில், கரோனாதொற்று ஏற்பட்டு 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால் கரோனா பரவுவது இன்னும் முடிவடையவில்லை.

இதனிடையே வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் சைக்கீ என்ற இணையதளம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 4 கண்டங்களைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் தலை வர்கள், சமூக வலைதளங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல் விவாதங்கள் மூலம் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளதாக சைக்கீ தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற 82% ஊழியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் மன அழுத்தம் குறைந்து விரும்பியபடி பணியாற்ற முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து பணியாற்றுவதால் கூடுதலாக பணியாற்ற முடிவதாகவும் 64% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சைக்கீ நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கருண்ஜித் குமா்திர் கூறும்போது, "வீட்டில் இருந்தோ அல்லது தொலைதூரத்தில் இருந்தோ பணியாற்றும் உலகுக்கு ஊழியர்களை வரவேற்கிறோம். அதுபோன்ற புதிய தொழில்நுட்பத்துக்கு உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மாறியுள்ளன" என்றார்.

SCROLL FOR NEXT