இந்தியா

கேரள பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து மோடி ஆறுதல்

பிடிஐ

கேரளாவில் பட்டாசு வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்ட கோயில் வளாகத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கொல்லம் நகருக்கு அருகே உள்ள புட்டிங்கல் கோயில் திருவிழா வின்போது பட்டாசு வெடித்தபோது நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதையடுத்து, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திரு வனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் வந்தடைந்தார். அவருடன் தீக்காய மருத்துவ நிபுணர்களும் டெல்லியிலிருந்து வந்திருந்தனர்.

அப்போது மாநில முதல்வர் உம்மன் சாண்டியும், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவும் மோடியை வரவேற்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விபத்து குறித்து அவரிடம் விளக்கிக் கூறினர். பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமான பகுதி மற்றும் இடிபாடுகள் சிதறிக் கிடந்த பகுதிகளை மோடி பார்வையிட்டார்.

பின்னர் விபத்தில் உயிரிழந் தவர்களை அடையாளம் காணப் பட்டது குறித்து விசாரித்ததாக சென்னிதலா தெரிவித்தார். அப் போது, தேவைப்பட்டால் டிஎன்ஏ சோதனை நடத்தி சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உம்மன் சாண்டி மோடியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்ற மோடி, அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து மோடி ட்விட்டரில் கூறும்போது, “இந்த விபத்து மிகுந்த மன வேதனையை தருவதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள் கிறேன். அதுபோல காயமடைந்தவர் கள் விரைவில் குணமடைய பிரார்த் தனை செய்கிறேன். காயமடைந்த வர்கள் விரும்பினால் அவர்களை மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங் களுக்கு அழைத்துச் செல்ல தேவை யான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று கேரள முதல்வ ரிடம் தெரிவித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT