இந்தியா

74 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுடன் இணைந்தவருக்கு பாகிஸ்தான் விசா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த 2 சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஒன்று சேர்ந்தனர். பஞ்சாபி லெஹர் என்ற யூடியூப் சேனல் இதனை சாத்தியமாக்கியது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பஞ்சாபின் புலேவால் கிராமத்தில் இருந்து தாய், தம்பி மற்றும் தங்கையை விட்டுப் பிரிந்து தந்தையுடன் பாகிஸ்தான் சென்ற சாதிக் கான் என்பவரின் பேட்டி இந்த சேனலில் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து புலேவால் கிராமத்தில் வசித்த, சாதிக் கானின் தம்பி சிக்கா கான் கண்டறியப்பட்டார்.

அண்ணன், தம்பி இருவரும், புதிதாக திறக்கப்பட்ட கர்த்தார்பூர் வழித்தடத்தில் அண்மையில் சந்தித்தனர். இருவரும் கண்ணீர் பெருக்குடன் கட்டிப்பிடித்து ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் சென்று அண்ணன் சாதிக் கான் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக சிக்கா கானுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று முன்தினம் விசா வழங்கியது.

SCROLL FOR NEXT