புதுடெல்லி: குடியரசு தின விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்காக விளக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி மற்றும் ட்ரோன்கள் பறக்கவிடும் நிகழ்வும் நடைபெற்றது.
ஆயிரம் ட்ரோன்கள் வெவ் வேறு வண்ணங்களில் பறந்து காட்சிகளை கண்முன்னே நிறுத்தின. இந்திய மூவர்ணக் கொடி, இந்திய வரைபடம், உலக உருண்டை என வண்ணங்களின் ஜாலமாக வானில் அவை பறந்து நிகழ்த்திய சாதனை காண்போரை வியக்க வைத்தது.
டெல்லி ஐஐடி முன்னாள் மாணவர்கள் குழு உதவியுடன் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய (டிடிபி) நிதி உதவியுடன் செயல்படுகிறது பாட்லேப்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம். இந் நிறுவனம் 1,000 ட்ரோன்களை பறக்கவிட்டு சாதித்துள்ளது.
முன்னதாக அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘பாட்லேப்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு தொடக் கத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ட்ரோன்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ. 2.5 கோடி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
ஆறு மாதங்களில் இந் தியாவிலேயே ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகவும் அமைச் சர் கூறினார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகளவில் உருவாகும் சூழலை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் யோசனைக்கு ஏற்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பாட்லேப்ஸ் நிறுவனத் துக்கும் நிதி அளிக்கப் பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவி மூலம் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்த முடிந்ததாக பாட்லேப் டைனமிக்ஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரிதா அலாவத் தெரிவித்தார்.
குடியரசு தின விழாவின் போது 1,000 ட்ரோன்களை பறக்கவிட்டதன் மூலம் மிக அதிக அளவிலான ட்ரோன்கள் பறக்க விடுவதில் சர்வதேச அளவில் சீனா, ரஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.