தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரி தன்சில் அகமது கொலை சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் நேற்று 2 பேரைக் கைது செய்தனர்.
என்ஐஏ-வில் டெபுடேஷன் முறையில் டிஎஸ்பியாக பணி புரிந்து வந்த முகமது தன்சில் (45) கடந்த 3-ம் தேதி உறவினரின் திருமணத்துக்குச் சென்று விட்டுத் திரும்பியபோது சுட்டுக் கொல் லப்பட்டார். இத்தாக்குதலில் அவரின் மனைவியும் படுகாய மடைந்தார். இரு குழந்தைகள் காய மின்றித் தப்பின. இக்கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பரேலி பகுதி ஐ.ஜி. விஜய் குமார் மீனா கூறிய தாவது: திருமண நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிய தன்சில் அகமதுவை குற்றவாளிகள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்துள்ளனர்.
தன்சில் அகமதுவின் உறவினர் ரேஹான், ஜைனுல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான முனீர் என்பவரைத் தேடி வருகிறோம்.
குடும்பத் தகராறு மற்றும் சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.