இந்தியா

இந்தியாவில் கரோனா பாசிடிவிட்டி விகிதம் 15.8% ஆகக் குறைவு: புதிதாக 2.51 லட்சம் பேருக்கு தொற்று

ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.51 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றாட பாசிடிவிட்டி ரேட், 19.59%ல் இருந்து 15.88% ஆகக் குறைந்துள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,51,209.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,06,22,709.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,47,443.

இதுவரை குணமடைந்தோர்: 3,80,24,771

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை : 21,05,611 (5.18%)

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 15.88% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 627.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,92,327

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,64,44,73,216 (164 கோடி)

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

கரோனா தொற்று குறைந்துவருவதால் டெல்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 95% முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மூன்றாவது அலையின் தாக்கம் மிதமானதாக இருப்பதாகவும், விரைவில் இது முடிவுக்கு வரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் பிற்பகல் 2.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் கரோனா நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT