அணிவகுப்பில் பங்கேற்ற ரஃபேல் போர் விமான முதல் பெண் விமானி ஷிவாங்கி சிங் (இடது). 
இந்தியா

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ரஃபேல் போர் விமான முதல் பெண் விமானி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி ராஜபாதையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது இந்திய விமானப் படையின் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து விமானப் படையின் 75 விமானங்கள் பறந்து சாகசம் செய்தன. இதில் பிரான்ஸிடமிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமானங்களும் அடக்கம்.

அணிவகுப்பின்போது ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற ஷிவாங்கி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற 2-வது பெண் போர் விமானி ஷிவாங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங், இந்திய விமானப் படையில் 2017-ல் சேர்ந்தார். முதலில் மிக்-21 பைசன் ரக விமானத்தை இயக்கி வந்த ஷிவாங்கி தற்போது ரஃபேல்போர் விமானத்தை இயக்கி வருகிறார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT