பெங்களூரு அருகே பாதாள சாக்கடையில் இறங்கிய 2 மாநகராட்சி தொழிலாளர்கள் உட்பட 4 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
பெங்களூரு அருகே சாலை யில் இருந்த பாதாள சாக்கடை குழியில் நேற்று முன் தினம் அடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக மாநகராட்சி ஊழியர்களான முனிசாமி கவுண்டர் (34), ஜெகநாத் (28) ஆகிய இருவரும் இறங்கினர். அப்போது விஷ வாயு தாக்கிய தில் நிலைகுலைந்த இருவரும் காப்பாற்றும்படி குரல் எழுப்பி யுள்ளனர். அப்போது அவ்வழி யாக வந்த மது (21), முனிராஜூ(23) ஆகிய இருவரும் தொழிலாளர்களை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும் அவர்கள் மீதும் விஷ வாயு தாக்கியது. இதில் நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் மூலம் 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த முனுசாமி கவுண்டர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் ஜெகந்நாத் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் தெரியவந் துள்ளது.
சம்பவம் குறித்து போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற் கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்ககோரியும், பாதாள சாக்கடையில் மனிதர் களை இறக்குவதை தவிர்க்க வலியுறுத்தியும் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்பட்டது.