கோப்புப் படம் 
இந்தியா

அருணாச்சல் சிறுவனை கண்டுபிடித்து விட்டோம்: சீன ராணுவத்தினர் தகவல்

செய்திப்பிரிவு

அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைப் பகுதியில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து விட்டோம் என அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டம் லங்டா ஜார் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மிரம் தரோன், கடந்த 18-ம் தேதி மாயமானார். அவரை சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றதாக மாநில பாஜக எம்.பி.யான தாபிர் காவ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சீன ராணுவத்தை தொடர்பு கொண்ட இந்திய ராணுவத்தினர், மாயமான சிறுவன் மிரம் தரோனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டனர். எனினும், சிறுவன் கடத்தப்பட்டானா என்பதற்கு இந்திய ராணுவத் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், மாயமான சிறுவன் மிரம் தரோனை கண்டுபிடித்து விட்டதாக சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் நேற்று தெரிவித்தது. தற்போது அந்த சிறுவனை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறினார்.

SCROLL FOR NEXT