குஜராத் முதல்வர் ஆனந்திபென் பயன்படுத்துவதற்கு ரூ. 100 கோடியில் புதிய விமானம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது 9 பேர் அமரக்கூடிய பீச்கிராப்ட் நிறுவனத்தின் சூப்பர் கிங் ஏர் 200 விமானத்தை முதல்வர் பயன்படுத்துகிறார். இந்த விமானத் தின் ஆயுள்காலம் 15 ஆண்டு கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்துடன் 15 ஆண்டுகளாவதால், புதிய விமானத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1999-ம் ஆண்டில் கேசுபாய் படேல் முதல்வராக இருந்தபோது பீச்கிராப்ட் சூப்பர் கிங் ஏர் 200 விமானம் ரூ.19.12 கோடிக்கு வாங் கப்பட்டது. அப்போது விமானத்தை கொள்முதல் செய்த முறை தவறா னது என்ற மத்திய தலைமை கணக் குத் தணிக்கையாளர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது.
சிவில் போக்குவரத்து அமைச் சகம் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ள 12 முதல் 15 இருக்கைகளை கொண்ட விமானத்தை வாங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற் காக உலக அளவில் டெண்டர் கோரும் நடவடிக்கைகளை தொடங்க ரூ. 1 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் பல்வேறு நாடுகளின் பத்திரிகைகளில் இது தொடர்பான டெண்டர் வெளியாகும்.
மாநில அரசு வசம் தற்போதுள்ள ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் போதாது என்பதால், தனியார் விமானம், ஹெலிகாப்டரை வாட கைக்கு எடுத்த வகையில் கடந்த ஆண்டு ரூ. 17.36 கோடி செலவிடப் பட்டது. இது தவிர, எரிபொருள், பராமரிப்பு, ஊழியர்களுக்கு ஊதியம் என ரூ. 7 கோடி வரை செலவானது.