டெல்லியில் சாலை விபத்தில் மரணம் அடைந்த மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் பி.முண்டேவின் மரணம் மீதான விசாரணையை சிபிஐ திங்கள்கிழமை தொடங்கியது. இதுதொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
முண்டேவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மகராஷ்டிராவின் பல கட்சித் தலைவர்கள் உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக, மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார். இவருடன் மகராஷ்டிர மாநில பாஜக தலைவர் தேவேந்திரா பத்னாவிசும் சென்றிருந்தார்.
இவர்களது கோரிக்கையை ஏற்ற ராஜ்நாத் சிங், மறுநாளே வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, மும்பை சிபிஐ அலு வலகம் முண்டே மரணம் தொடர் பான வழக்கு விசாரணையை திங்கள்கிழமை தொடங்கியது.
இதுதொடர்பாக மகராஷ்டிரா வைச் சேர்ந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களிட மும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
பாஜகவைச் சேர்ந்த சில மகராஷ்டிர தலைவர்கள் அவ மானப்படுத்தியதால், காங்கிரஸ் கட்சியில் சேர முண்டே முயன்றதாக சொல்லப்படுவதே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
கடந்த ஜூன் 3-ம் தேதி மும்பை செல்வதற்காக இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு கிளம்பிய முண்டே, தனது காரின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்தார். அது, லோதி சாலையில் உள்ள அரபிந்தோ சவுக்கின் சிக்னலை தாண்டியபோது, மற்றொரு சாலையில் இருந்து வந்த ஒரு டாடா இண்டிகா கார் திடீரென அதன் ஒருபக்கமாக மோதி விபத்துக் குள்ளானது. இதில், ஓட்டுநர் வீரேந்தர் குமார் மற்றும் முன்புறம் அமர்ந்திருந்த உதவியாளர் சுரேந்தர் நாயர் ஆகியோருக்கு எந்த காயமும் இல்லை. இதற்காக, டாடா இண்டிகாவின் ஓட்டுநர் குருவீந்தர் சிங் கைது செய்யப் பட்டு அதே நாளில் ஜாமீனில் விடப்பட்டார்.
முண்டேவின் விபத்து மீது முதன் முறையாக சந்தேகப்பட்ட சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிபிஐ விசாரணை கோரி யிருந்தார். பாஜகவின் மூத்த தலை வரான பாண்டுரங்க புந்த்கரும், முண்டேவின் மரணத்தில் சந்தேகத்தை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.