நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் முப்பரிமாண ஓவியத் தில் வேகத்தடைகளை அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் அவர், ‘‘தேவையில்லா மல் வேகத் தடைகளை நிறுவுவதற்கு பதிலாக முப்பரிமாண பிம்பம் கொண்ட வேகத்தடைகளை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது’’ என குறிப்பிட்டார்.
இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ‘‘அங்கு வேகத்தடை இல்லை. அது வெறும் ஓவியம் தான் என்பது ஓட்டுநருக்கு தெரியும் பட்சத்தில், நிச்சயம் வேகத்தை அவர் குறைக்கமாட்டார்’’ என ‘ட்விட்டரில்’ ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ‘ட்விட்டர்’ பதிவில், ‘‘இது மோசமான யோசனை. வேகமாக வாகனம் ஓட்டி வரும் ஒரு ஓட்டுநர், அந்த ஓவியத்தை கண்ட தும் அங்கு ஏதோ தடை இருப்பதாக நினைத்து உடனடியாக வாகனத்தை நிறுத்த முயற்சிப்பார். இதனால் விபத்து தான் நேரிடும்’’ என குறிப் பிடப்பட்டுள்ளது. தரமான முறை யில் அந்த வேகத்தடைகளில் வண்ணம் பூச வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.