இந்தியா

உ.பி. தேர்தல்: 85 வேட்பாளர்கள் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ரே பரேலியில் அதிதி சிங் போட்டி

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச தேர்தலில் 85 வேட்பாளர்கள் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று 107 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 22 ஆம் தேதி) 85 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ரே பரேலியில் அதிதி சிங்: அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அதிதி சிங் ரே பரேலி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

உ.பியின் முக்கியமான தொகுதியாக விளங்கிவரும் ரேபரேலி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை ஒரேவிதமாகவே நகர்ந்துவந்துள்ளது, கடந்த ஆறு தேர்தல்களில் காங்கிரஸ் நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது. 2007 மற்றும் 2012ல் அது தோல்வியடைந்த இரண்டு முறை, அப்போது வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் குமார் சிங் நான்காவது மற்றும் ஐந்தாவது தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

ரேபரேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கோட்டையாகும். 1980 முதல் ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே (விதிவிலக்குகள் 1996 மற்றும் 1998 இல், பிஜேபியின் அசோக் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தவிர) மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் அகிலேஷ் குமார் சிங்கின் மகள் அதிதி சிங். அவர் 2017 இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்,

இப்போது இந்த முறை பாஜக முகமாக களமிறங்குகிறார். அதனால் ரே பரேலியின் அரசியல் கள முகமும் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிதி சிங்கை பாஜகவில் ரே பரேலியில் நிறுத்துவது காங்கிரஸ் கோட்டையை புரட்ட உதவும் என்று ஆளும் பாஜக நம்புகிறது, ஒருவேளை அது நடந்தால் அது மிக முக்கியமான முடிவாக இருக்கும்.

SCROLL FOR NEXT