இந்தியா

மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் 5 நட்சத்திர வசதி: ஐ.நா. கருத்தரங்கில் இந்திய பிரதிநிதி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நியூயார்க்: சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பேசியதாவது:

அல் – காய்தா உள்ளிட்ட பலதீவிரவாத இயக்கங்களுக்கு ஐ.நா. தடை விதித்திருப்பது, தீவிரவாதத்தை ஒழிக்கும் சர்வேதச நாடுகளின் முயற்சிக்கு கூடுதல் பலம்சேர்ப்பதாக உள்ளது.

இருந்தாலும், இதுபோன்ற ஐ.நா.வின் தடை நடவடிக் கைகளை உலக நாடுகள் முறையாக பின்பற்றுகின்றனவா என்பதைஉறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியை சில நாடுகள் சீர்குலைத்து வருகின்றன. உதாரணமாக, பல தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசே புகலிடம் அளித்து வருகிறது. குறிப்பாக, 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு வழக் கில் தொடர்புடையவர்கள் பாகிஸ் தானில் 5 நட்சத்திர வசதிகளை அனுபவித்து வருகிறார்கள்.

இவ்வாறு டி.எஸ். திருமூர்த்தி கூறினார்.

SCROLL FOR NEXT