இந்தியா

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்: பாஜகவினருக்கு மோடி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நமோ செயலி மூலம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனதுசொந்த தொகுதியான வாரணாசியில் பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

இயற்கை விவசாயத்திற்கு உத்வேகம் அளிக்க வேண்டும். ரசாயனமற்ற விவசாயத்திற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சிறு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் அதிக பலன்களைத் தரும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். நாட்டின் 75-வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில் அனைவரையும் இணைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் முக்கியம், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை நாம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, கட்சித் தொண்டர்கள் பங்கேற்கும் பிரதமர் மோடியின் முதல்அரசியல் உரையாடல் இதுவாகும். கரோனா பரவல் காரணமாகதேர்தல் ஆணையம் பேரணிகளையும், பொதுக்கூட்டங்களை யும் ரத்து செய்துள்ளதால் காணொலிக் காட்சிகள் மூலம் கூட்டங்கள் நடைபெறுவது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT