இந்தியா

சிறுமி தற்கொலை விவகாரம்: விசாரணைக்கு ஒடிசா அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

ஒடிசாவில் எழுதுபொருள் வாங்க பெற்றோர் காசு தராததால், சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சர்வ ஷிக்ச அபியான் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தற்கொலைக்கான காரணத்தை கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளதாக கஞ்சம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரேம் சந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஒடிசா தலைநகரான புவனேஷ்வரிலிருந்து 170 கி.மீ தொலைவில் உள்ள அஸ்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிஜோய் நாயக். இவரது மகள் (14) இந்த ஆண்டு 7 ஆம் வகுப்புக்கு தேர்வாகினர். பெற்றோரிடம் நீண்ட நாட்களாக புதிய வகுப்புக்கு புதிதாக நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட அடிப்படை எழுதுப்பொருட்கள் வாங்க காசு தருமாறு கேட்டிருந்தார்.

தினக் கூலியாக வேலைப் பார்த்து வந்த பிஜோய் நாயக், சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில், குடும்பம் மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தது. இந்நிலையில் எழுதுபொருட்கள் வாங்க காசு தர தாமதமானதை அடுத்து மனமுடைந்த சிறுமி, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுமியை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT