கோப்புப் படம் 
இந்தியா

‘‘தடுப்பூசி இயக்கத்தில் தொடர்புடைய  ஒவ்வொருவரையும் வணங்குகிறேன்’’ - பிரதமர் மோடி ட்வீட்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தடுப்பூசி இயக்கம் ஓராண்டை நிறைவு செய்துள்ளதைக் குறிக்கும் வகையில் அதனுடன் தொடர்புள்ள, தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி இயக்கம் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புள்ள ஒவ்வொருவரையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் பெரும் வலிமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மைகவ் இந்தியா ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

‘‘நாம் இன்று தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டைநிறைவு செய்துள்ளோம். தடுப்பூசி இயக்கத்தில் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரையும் நான் வணங்குகிறேன்.

கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசி திட்டம் பெரும் வலிமையைச் சேர்த்துள்ளது. உயிர்களைக் காப்பாற்றி, அதன் மூலம் வாழ்வாதாரங்களை பாதுகாத்துள்ளது.

அதேசமயம், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பங்கு அளப்பரியதாகும். தொலைதூரப் பகுதிகளிலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும், நமது சுகாதாரப் பணியாளர்கள் அங்கு அவற்றை எடுத்துச் செல்வதையும் நாம் காண முடிகிறது. நமது இதயமும், மனதும் பெருமிதத்தால் நிறைந்துள்ளது.

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அறிவியல் சார்ந்ததாகவே இருக்கும். நமது சக குடிமக்கள் முறையான மருத்துவ கவனம் பெறுவதை உறுதி செய்ய சுகாதார உள்கட்டமைப்பை நாம் அதிகரித்து வருகிறோம்.

கோவிட்-19 தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து, பெருந்தொற்றிலிருந்து மீள்வோம்’’

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT