கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக 2 வார பயணமாக நேற்றுஅமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவியும் உதவியாளரும் சென்றுள்ளனர்.
எனினும், முதல்வர் பினராயி விஜயன் தனது அமைச்சக பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லை. அலுவலக பணிகளை இணையவழியில் அவர் மேற்கொள்வார் எனமுதல்வர் அலுவலக வட் டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 29-ம் தேதி அவர் நாடு திரும்புகிறார்.
இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் மினசோடா நகரில் உள்ள மாயோ மருத்துவமனையில் பினராயி விஜயன் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் மீண்டும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.