இந்தியா

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த ஆலோசனை

பிடிஐ

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவுகளைக் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர் கள் குழுவின் முதல் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால், ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேர வைக்கு தேர்தல் நடத்தும்படி பரிந் துரைக்க இக்குழு உரிய தகுதி யுடையது அல்ல என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க பரிந்துரைத்துள்ளது. அதற்கான செலவுகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை இந்தகுழு மேற் கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் அலுவலகங்கள் விவகாரத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங் கேற்ற இந்த அமைச்சர் குழுவின் கூட்டம் கடந்த 11-ம் தேதி கூடியது.

நாடு முழுக்க ஒரே சமயத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் களை நடத்தலாம் என நாடாளு மன்றக் குழு கடந்த டிசம்பரில் பரிந்துரை செய்ததை அடுத்து இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT