இந்தியா

கரோனா பரவும் வேளையில் காங்கிரஸார் மேகேதாட்டு பாதயாத்திரை நடத்துவது ஏன்? - கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

இரா.வினோத்

பெங்களூரு: மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் அக்கட்சியினர் மேகேதாட்டு நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட 41 காங்கிரஸ் பிரமுகர்கள் மீது கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள் ளது.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் நாகேந்திர பிரசாத், மேகேதாட்டு யாத்திரையை நிறுத்த உத்தரவிட கோரி கர்நாடக உயர் நீதிமன்றத் தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் முன் னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘கர்நாடகாவில் கரோனா வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸார் மேகேதாட்டு நோக்கி பாத யாத்திரை நடத்துவது ஏன்? அந்த தலைவர்களுக்கு பொதுமக்களின் நலனில் அக்கறை இல்லையா? ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா பரவினால் யார் பொறுப் பேற்பார்கள்? இந்த யாத்திரையை அரசு எப்படி அனுமதிக்கிறது? வெள்ளிக்கிழமைக்குள் (நாளை) காங்கிரஸ் கட்சியும், கர்நாடக அரசும் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும்'' எனக்கூறி, வழக்கை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT