இந்தியா

மேற்குவங்கத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: தேர்தல் அலுவலர்களின் காரில் 4 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

மேற்குவங்கத்தில் 56 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

மேற்குவங்கத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அலிபுர்துவார், டார்ஜிலிங், மால்டா உட்பட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 56 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக ஆகியவை இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 33 பெண்கள் உட்பட மொத்தம் 383 வாக் காளர்கள் களத்தில் உள்ளனர். 1.2 கோடி பேர் வாக்குரிமை பெற் றுள்ளனர். 13,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2,909 சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

பிர்பும் மாவட்ட திரிணமூல் தலைவர் அனுபிரதா மண்டல், தேர்தல் பிரச்சாரத்தின்போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே அவரை 24 மணி நேர கண்காணிப்பில் வைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாவட்ட ஆட்சியர், வீடியோகிராபர் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.

வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் அலுவலர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த காரில் ஒரு பை இருப்பதை ஓட்டுநர் பார்த்துள்ளார். அதை திறந்து பார்த்த போது 4 வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயலி ழக்கச் செய்தனர். அவை எந்த வகை வெடி குண்டுகள் என்பது குறித்து போலீஸார் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT