இந்தியா

25 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் போலி என்கவுன்ட்டர் வழக்கில் 47 போலீஸாருக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போலி என்கவுன்ட்டர் வழக்கில் 47 போலீஸ்காரர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

கடந்த 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி, சீக்கியர்கள் சிலர் நானக்மாதா, பாட்னா சாகிப், ஹுசுர் சாகிப் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பஸ்ஸில் வந்தவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் கச்லாபுல் மலைப் பகுதியில் இந்த பஸ்ஸை வழிமறித்த சில போலீஸ்காரர்கள் அதிலிருந்த 10 பேரை வலுக்கட்டாயமாக கீழிறக்கினர். பின்னர் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து, மூன்று இடங்களில் வனப்பகுதியில் வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட அனை வரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் எனவும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த என்கவுன்ட்டரை வில்சந்தா, புரன்புர், நவுரியா காவல் நிலைய காவலர்கள் செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆர்.எஸ். சோதி என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றமத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணையில், தீவிர வாதிகளைக் கொன்றால் விருதும், அங்கீகாரமும் கிடைக்கும் என்பதற் காக அப்பாவி சீக்கியர்களைக் கொன்று, அவர்களை தீவிர வாதிகள் என போலீஸார் சித்தரிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 57 போலீஸார் மீது 1995-ம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் விசா ரணைக் காலத்திலேயே 10 பேர் உயிரிழந்துவிட்டனர்.

47 பேரும் குற்றவாளிகள்

கடந்த 1-ம் தேதி, குற்றம்சாட்டப் பட்ட 47 பேரும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லல்லூ சிங் தீர்ப்பளித்திருந்தார். நேற்று தண்டணை விவரம் அறிவிக்கப்பட்டது. இதில், 47 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவும் போதுமான சாட்சியங் களும் ஆதாரங்களும் இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

என்கவுன்ட்டர் நடந்த பகுதி, சம்பவம் நடந்த காலகட்டத்தில் தீவிரவாத செயல்பாடுகளுக்கு பிரசித்தி பெற்றது.

SCROLL FOR NEXT