சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அஸ்வின் மனோஜ், ஆஷிக் ரெஜி. 
இந்தியா

நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் கேரள இளைஞர்கள்

செய்திப்பிரிவு

கொச்சி: நாடு முழுவதும் சைக்கிளிலேயே சுற்றுப்பயணம் செய்து கேரள இளைஞர்கள் சாதனை படைக்கவுள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இருட்டி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் மனோஜ். பிரவம் பகுதியிலுள்ள பம்பக்குடா பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக்ரெஜி. இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.வி.ராஜா விளையாட்டுப் பள்ளியில் சந்தித்து நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். இருவருக்கும் 21 வயதாகிறது. ஆஷிக் ரெஜி தடகள வீரர். அஸ்வின் மனோஜ் கால்பந்து வீரர். இருவரும் நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்தனர்.

இதன்படி இவர்களது சைக்கிள்பயணத்தை பம்பக்குடாவில் உள்ளூர்பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர். அடுத்தஒன்றரை ஆண்டு காலத்துக்கு சைக்கிளிலேயே இந்தியா முழுவதும் இவர்கள் சுற்றுப் பயணம் செய்யவுள்ளனர்.

இதுகுறித்து ஆஷிக் ரெஜி கூறும்போது, “இரக்க குணமுள்ள பொதுமக்கள் மீது நம்பிக்கை வைத்து இந்தபயணத்தை தொடங்கி உள்ளோம். ஏனெனில்,வரும் வழியில் பொதுமக்கள் எங்களுக்கு உணவளித்து, இரவில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்தனர்.

சுற்றுலா, பயண வழிகாட்டி தொடர்பான தகவல்களை யுடியூபில் பதிவு செய்து வருகிறேன். அதன்மூலம் கிடைத்த பணத்தில் எனக்கு வேண்டிய சைக்கிள், கூடாரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம். தினமும் பயணம் தொடர்பான வீடியோக்களை பதிவிட உள்ளேன்” என்றார்.

அஸ்வின் மனோஜ் கூறும்போது, “டெல்லியிலுள்ள கேரளா ஹவுஸில்நான் பணிபுரிந்து வருகிறேன். கரோனாவைரஸ் பெருந்தொற்று காலத்தில்சைக்கிள் மூலம் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்கும். பொதுமுடக்கம் இருக்கும் பகுதியிலும் சைக்கிளில் செல்வதற்கு வழி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்

SCROLL FOR NEXT