ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அதிகாரிகள் சுவாமியின் திருவுருவப் படம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். 
இந்தியா

இஸ்ரோ தலைவர் சிவன் காளஹஸ்தி கோயிலில் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

ஸ்ரீகாஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் விளங்குகிறது. இங்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இக்கோயிலில் ராகு-கேது பூஜை செய்த சிவன் பிறகு மூலவரை வழிபட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இஸ்ரோ மூலம் செலுத்தப்படும் அனைத்து விண்கலங்களும், முயற்சிகளும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என சுவாமியை வேண்டிக்கொண்டேன். சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்த இஸ்ரோ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்றார். கோயிலில் குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே இஸ்ரோ தலைவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமியின் திருவுருவப் படம், பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

SCROLL FOR NEXT