இந்தியா

‘‘சாம்பியன்களுடன் சந்திப்பு’’- தமிழக இளைஞர்களை ஊக்குவித்த கே.சி.கணபதி, வருண் தாக்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: விளையாட்டு குறித்து தமிழக இளைஞர்களை ஊக்குவித்த கே.சி.கணபதி, வருண் தாக்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“சாம்பியன்களுடன் சந்திப்பு” இயக்கத்த்தின் கீழ் விளையாட்டு மற்றும் உடற்பயிற்ச்சி குறித்து தமிழ்நாட்டு இளைஞர்களை ஊக்குவித்த கே.சி.கணபதி மற்றும் வருண் தாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான தனது பதில் ட்வீட்டில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

“கே.சி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஆகியோரின் அற்புதமான இந்த செயல் தமிழ்நாட்டின் திறமையான இளைஞர்களை ஊக்குவிக்கும்.

இத்தகைய முயற்சிகள் விளையாட்டு மற்றும் உடல்நலம் தொடர்பான விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT