இந்தியா

காய்கறி போஹா, பஜானி வடை, காஜர் கா அல்வா: ஆயுஷ் உணவு வகைகள் அறிமுகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆயுஷ் அமைச்சகம் தனது உணவகத்தில் ‘ஆயுஷ் உணவு வகைகளை’ வழங்குகிறது.

ஊட்டச்சத்து உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில், ஆயுஷ் அமைச்சகம் ஆயுஷ் பவனில் உள்ள உணவகத்தில் ஆயுஷ் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ் ஆஹார்’ கீழ் காய்கறி போஹா, பஜானி வடை, காஜர் கா அல்வா மற்றும் பானம் ஆகியவை கிடைக்கிறது. அனைத்து உணவு வகைகளும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதாகவும், அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில் ஆயுஷ் செயலாளர் மருத்துவர் ராஜேஷ் கோட்டேச்சா பேசுகையில், உணவகத்தில் கிடைக்கும் ஆயுஷ் உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எளிதில் செரிமானம் ஆகும் வகையில் உள்ளன என்றார்.

மேலும் அவர் கூறுகையில் “கல்வி, ஆராய்ச்சி, உற்பத்தி, பொது சுகாதாரம் மற்றும் நிர்வாகத்தின் மீது இந்த ஆண்டு எங்கள் கவனம் இருக்கும். மேலும், ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்த பணியாற்றி வருகிறோம். 2021-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் பாராட்டத்தக்க பணிகளை அமைச்சகம் செய்து வருகிறது’’ என்றார்.

2022-ம் ஆண்டில் ஆயுஷ் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்தும் நிகழ்ச்சியின் போது அதிகாரிகள் விவாதித்தனர். ஆயுஷ் இணை செயலாளர்கள் கவிதா கர்க் மற்றும் செந்தில் பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT