இந்தியா

டிசம்பர் மாதத்தில் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் ரூ.3,679 கோடி வசூல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலமான சுங்கக் கட்டண வசூல் கடந்த டிசம்பர் மாதத்தில் உச்சம் தொட்டுள்ளது.

2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் பாஸ்டேக் மூலமாக ரூ.3,679 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு பாஸ்டேக் மூலமாக சராசரியாக ரூ.119 கோடி வசூலாகி உள்ளது.

நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் சுங்கக் கட்டணவசூல் ரூ.502 கோடி அதிகரித்துள்ளது. அதேபோல் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு டிசம்பரில் சுங்கக் கட்டண வசூல் ரூ.1,375 கோடி அதிகரித்துள்ளது. 2020 டிசம்பரில் ரூ.2,304 கோடி வசூலானது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்ததால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுங்கச்சாவடிகளில் கடந்த ஓராண்டாக கட்டணம் வசூல் செய்ய முடியாதசூழல் நிலவியது. தற்போது மத்திய அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றுள்ள நிலையில், மீண்டும்அம்மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அது டிசம்பர் மாதம் சுங்கக்கட்டணம் வசூல் அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. சுங்கக்கட்டணம் வசூல்அதிகரிப்பது பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்திருப் பதற்கான அறிகுறியாக பார்க் கப்படுகிறது.

- பிடிஐ

SCROLL FOR NEXT